காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலைவாக்கத்தில் சிறிய விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் திருமதி. தி. சினேகா, இ. ஆ. ப. , அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க. ஆர்த்தி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த விளையாட்டு அரங்கம் அப்பகுதி மக்களின் விளையாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.