காஞ்சி நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டும் பணி துவக்கம்

67பார்த்தது
காஞ்சி நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டும் பணி துவக்கம்
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் -பொன்னேரிக்கரை, பாலுச்செட்டிசத்திரம் உள்ளிட்ட பிரதான சந்திப்பு கடவுப்பாதைகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன. விபத்தை தவிர்க்க, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழிச் சாலையாகவும், 18 இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது. 

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வாயிலாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டுள்ளன. மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் வரை, 23 கி.மீ. தூரம் 2022ம் ஆண்டு பணிகள் துவங்கி, 2024 மார்ச் மாதத்தில் முடிக்க வேண்டும். அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ. தூரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024 டிசம்பர் மாதம் முடிக்க வேண்டும். அடுத்த கட்டமாக, காரப்பேட்டை - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ. தூரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024 அக்டோபர் மாதம் முடிக்க வேண்டும். கடந்த 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள் கால அவகாசம் நிறைவுடைந்தும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.