மண்டல அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

210பார்த்தது
மண்டல அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க. ஆர்த்தி, காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு. ஆஷிக் அலி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. பு. விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. ச. ரவிச்சந்திரன் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் பணிகளை திறம்பட மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி