காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு என தொடரப்பட்ட வழக்கில், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடைபெறும் விசாரணைக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி தீப்த்தி அறிவுநிதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வரும் மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.