செங்கையில் வழுக்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறப்பு

64பார்த்தது
செங்கையில் வழுக்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பட்டிக்காடைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மனைவி சோலையம்மாள், 80, வீட்டு வாசலில் வழுக்கி விழுந்து காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை இறந்தார். திருக்கழுக்குன்றம் போலீசில், அவரது மகள் பொன்னி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி