வெள்ளப்பெருக்கால் 12 கிராமத்தினருக்கு... எச்சரிக்கை

0பார்த்தது
வெள்ளப்பெருக்கால் 12 கிராமத்தினருக்கு... எச்சரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்திலிருந்து ஸ்ரீபெரும்புதுார் ஏரி வரை செல்லும் 44 கி.மீ. நீளமுள்ள கம்பன் கால்வாயில், பாலாற்றில் இருந்து வரும் 1,000 கன அடி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களில் உள்ள 85 ஏரிகள் நிரம்பும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குணகரம்பாக்கம் - செல்லம்பட்டிடை இடையே உள்ள மடுவு மீது வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குணகரம்பாக்கம் மடுவு 400 மீட்டர் நீளத்தைக் கடந்தால், மதுரமங்கலம் வழியாக சுங்குவார்சத்திரம் எளிதாகச் சென்றடையலாம். எடையார்பாக்கம், மேலேரி கிராமங்கள் வழியாகச் செல்ல 3 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி