காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் 655 பயனாளிகளுக்கு ரூ. 18.53 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சினேகா, இ. ஆ. ப. , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம். பி. எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் தமகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பா. முருகேசன், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி. மலர்க்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.