காஞ்சிபுரம் வட்டம், சிறுகாவேரிபாக்கம் தனியார் திருமண மஹாலில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் 330 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர் மற்றும் சி. வி. எம். பி. எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன், சார் ஆட்சியர் ஆஷிக் அலி, ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.