காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்காக வரும் 18ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 044-2999 8040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.