காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் தாயார் குளத்தில் உள்ள புகழ்பெற்ற காயாரோகணீஸ்வரர் சிவாலயத்தில், குரு பரிகார ஸ்தலமான இங்கு குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயரும் குருப்பெயர்ச்சி விழா இன்று (மே 26) சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமானோர் பரிகார பூஜைகளில் கலந்துகொண்டனர்.