காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாகரல் போலீசார் நடத்திய சோதனையில் 62 கிலோ எடையுள்ள, 43,570 ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடையை நடத்தி வந்த மணிகுமார் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.