காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப. , அவர்கள் விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பா. முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க. ஆர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. கோ. யோகவிஷ்ணு, வேளாண் இணை இயக்குநர் திருமதி. கிருஷ்ணவேணி ஆகியோர் உடனிருந்தனர். விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.