காஞ்சி: பிரியாணி சாப்பிட்ட 99 பேர் அட்மிட் அமைச்சர்கள் ஆய்வு

0பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள டி.எஸ். கனெக்டர் அண்டு கேபிள்ஸ் இண்டியா தனியார் தொழிற்சாலையில் நேற்று மதியம் பிரியாணி சாப்பிட்ட 99 தொழிலாளர்கள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இன்று (ஜூன். 4) தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு உடல்நலம் விசாரித்தனர். தொடர்ந்து, உணவு சப்ளை செய்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி