காஞ்சி: தற்கொலை செய்தவரின் உடலை தோண்டி எடுத்ததால் பரபரப்பு

399பார்த்தது
காஞ்சி: தற்கொலை செய்தவரின் உடலை தோண்டி எடுத்ததால் பரபரப்பு
மாடம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த டீக்கடை ஊழியர் ரமேஷ் (42) கடன் பிரச்சினையால் கடந்த 15ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் உடலைப் புதைத்ததாக எழுந்த தகவலையடுத்து, மணிமங்கலம் போலீசார் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய தோண்டி எடுக்க முயன்றனர். அப்போது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி