காஞ்சி: மகளிர் உரிமைத் தொகை..வெளியான தகவல்

0பார்த்தது
காஞ்சி: மகளிர் உரிமைத் தொகை..வெளியான தகவல்
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கை உறுதி செய்யும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இத்திட்டத்தில் மேலும் பல பெண்களை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பெறப்பட்ட 35 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களில், தகுதியான அனைவருக்கும் டிசம்பர் 15 அன்று நிதி விடுவிக்கப்பட உள்ளது. புதிய பயனாளிகளின் வங்கி கணக்கை சரிபார்க்க, ஒரு ரூபாய் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி