காஞ்சிபுரம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

424பார்த்தது
காஞ்சிபுரம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதியில் உள்ள இந்தியா நம்பர் ஒன் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை ஓரகடம் போலீசார் தேடி வருகின்றனர். வியாழக்கிழமை அதிகாலை பணம் எடுப்பது போல் வந்த மர்ம நபர்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைக்க முயன்றபோது, எச்சரிக்கை மணி அடித்ததால் தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி