காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 'தங்க பல்லி' மாயமானதாகவும், கோயில் நிர்வாகம் தங்கம் மற்றும் வெள்ளி பல்லி சிலைகளை மாற்ற முயற்சிப்பதாகவும் எழுந்த புகார் முற்றிலும் பொய்யானது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பொய் புகார் அளித்த ரங்கராஜன் நரசிம்மன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த விளக்கம் பக்தர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.