ஓபிஎஸ் அணியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் விலகல்

4பார்த்தது
ஓபிஎஸ் அணியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் விலகல்
ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகிவிட்டதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்தியால்பேட்டை ரஞ்சித் குமார் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளாததால் வேறு கூட்டணியில் இணைவோம் என 88 மாவட்ட செயலாளர்களில் 77 பேர் வலியுறுத்தியதாகவும், அதற்கு ஓபிஎஸ் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி