காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று (மே. 21) இரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இரண்டு மணிநேரமாக மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாலாஜாபாத் - தாம்பரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் வந்து பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்வாரிய அலுவலகம் சில நிமிடங்களில் மின்சாரம் வரும் என்று கூறியது.