காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்

2பார்த்தது
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் 7வது நாளான இன்று (ஜூன். 3) முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, கலெக்டர் சினேகா ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். வரதராஜப் பெருமாள் ஶ்ரீதேவி பூதேவியுடன் நான்கு ராஜ வீதிகளில் பவனி வந்தார். திருவிழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ராஜலட்சுமி, ஊழியர்கள், பட்டாச்சார்யர்கள், உபயதாரர்கள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி