காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி மாத பிரமோற்சவ விழா இன்று (மே. 28) வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கருடாழ்வார் ஓவியம் பொறிக்கப்பட்ட கொடியேற்றத்தின் போது ஶ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் எழுந்தருளிய நிலையில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்ற விழா நடந்தது. தொடர்ந்து பஞ்சவர்ண மாலைகள் மற்றும் தங்க வைர ஆபரணங்கள் சூடி சப்பர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.