காஞ்சிபுரம்: 600 மதுபாட்டில்களுடன் பெண் கைது

9பார்த்தது
காஞ்சிபுரம்: 600 மதுபாட்டில்களுடன் பெண் கைது
கோனேரிக்குப்பத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். கோனேரிக்குப்பத்தைச் சோ்ந்த சரண்யா(36) வீட்டுக்கு பின்புறத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்  பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்குப்பிரிவு ஆய்வாளா் கவிதா, சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ் தலைமையிலான குழுவினா் சரண்யா வீட்டில் சோதனை செய்தனர். அப்போது 600 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். சரண்யா மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.