குன்றத்தூர்: அறுசுவை உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர்

1பார்த்தது
குன்றத்தூர்: அறுசுவை உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மனும், தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் தா. மோ. அன்பரசனின் தந்தையுமான தா. மோகலிங்கம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று (மே 27) குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஏழை எளிய மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன்னாள் அமைச்சர் தா. மோ. அன்பரசன் புத்தாடைகளை வழங்கினார். முன்னதாக, தனது தந்தை - தாய் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you