காஞ்சிபுரத்தில் அரசுப்பள்ளி எதிரில் இரவுநேர மதுக்கூடம்

52பார்த்தது
காஞ்சிபுரம் மாநகரம் காமாட்சியம்மன் கோயில் கச்சபேஸ்வரர் கோயில் அருகில் உள்ளது. அந்திரசன் மேல்நிலைப்பள்ளி இந்த அரசுப்பள்ளியில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இப்பள்ளியின் எதிரில் எப்போதும் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக உள்ளது. 

வீதியெங்கும் மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில் உடைந்த துண்டுகள் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய கட்டுமான இடத்தின் பின்புறம் உள்ளது. இரவுநேர மதுக்கூடமாகவும் சிறுநீர் கழிப்பிடமாகவும் மாறியுள்ள அவலநிலையை மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து போக்க வேண்டும் என்கின்றனர் காஞ்சிபுரம் மக்கள்.
Job Suitcase

Jobs near you