காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில், பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி, திடீரென பிரேக் போட்ட லாரி மீது மோதியதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.