காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் தினேஷ் (25) சில தினங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தார். இது தெரியாத நிலையில், முன்பகை காரணமாக தினேஷின் உறவினர்களான சார்லஸ் (22) மற்றும் ராஜ்குமார் (23) ஆகியோர் நேற்று (மே. 30) அதிகாலை தினேஷ் குடியிருந்த பழைய வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் வீட்டில் லேசான சேதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வீடு மாறியதால் தினேஷ் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.