காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக ரஞ்சித்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று (மே. 18) காஞ்சிபுரத்தில் எம்எல்ஏ அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து பணிகளை துவக்கிய அவருக்கு கட்சி நிர்வாகிகள் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.