ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவன ஊழியர் அரிராமன் (40) இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில், அரிராமனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.