செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீராமலு நகரில், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை மாற்றக் கோரி சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடுபழனி சாலையில் அரை மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்சாரத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.