ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தில், டிசம்பர் 1 அன்று காலை நடைபெற்ற திருமணத்தின் சில நிமிடங்களிலேயே மணமகன் அஜித்குமார் (27) குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை உபாதை கழிக்க சென்றவர் திரும்பாததால் தேடியபோது, குளத்தில் அவரது உடலும், உடமைகளும் கண்டெடுக்கப்பட்டன. மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.