சடலம் அடக்கம் செய்ய இடம் கோரி சாலை மறியல்

2பார்த்தது
சடலம் அடக்கம் செய்ய இடம் கோரி சாலை மறியல்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்னேரி கிராமத்தில், ஒட்டன்குடிசை மக்களுக்கான மயானத்தில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், உயிரிழந்த மாரியம்மாள் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதை கண்டித்து கிராம மக்கள் வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, மயானத்தில் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி