காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப. , அவர்கள் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மின்கலம் பொருத்திய சக்கர நாற்காலியை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பா. முருகேசன் அவர்களும் உடனிருந்தார். இக்கூட்டம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் நோக்கில் நடைபெற்றது.