2026 தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணிகளின் ஒரு பகுதியாக, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் காலணி மற்றும் அண்ணா குடியிருப்பு பகுதிகளில் கைத்தறி நெசவாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார். நெசவாளர்களின் குறைகளை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்கான ஆலோசனைகளை அவர் பெற்றார்.