காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வெள்ளி, தங்கப்பல்லி சிலைகள் மாயமானதாகவும், அவற்றை மாற்ற முயற்சிப்பதாகவும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கோயில் உதவி ஆணையர் ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். கோயிலில் பணிகள் நடப்பதால் அறையிலேயே பல்லி சிலைகள் இருப்பதாகவும் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார்.