குன்றத்தூர் அருகே அம்மன் கோவில் நகைகளை திருடியவர்கள் கைது

241பார்த்தது
குன்றத்தூர் அருகே அம்மன் கோவில் நகைகளை திருடியவர்கள் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த நட்டரசன்பட்டு ஊராட்சி வடமேல்பாக்கம் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் அம்மன் சிலையில் இருந்த தாலி மற்றும் இரண்டு தங்க செயினை செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (18) மற்றும் 17 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் திருடிச் சென்றனர். செல்லும் வழியில் மறைமலைநகர் ரோந்து போலீசாரிடம் சிக்கிய மூவரும் படப்பை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டனர். படப்பை போலீசார் ஆனந்தை சிறையிலும், சிறுவர்களை காப்பகத்திலும் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி