தாம்பரம் அருகே கானா பாடகர்கள் இருவர் வெட்டி படுகொலை

0பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வரதராஜபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான பரத் (24), சீனு (25) ஆகியோர் மே. 16 இரவு ஒரகடம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, படப்பை அருகே அம்மணம்பாக்கம் பகுதியில் நண்பர் லோகேஷ் வீட்டில் தங்கியிருந்தனர். மே. 17 காலை, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வீட்டிற்குள் புகுந்து பட்டா கத்தியால் பரத் மற்றும் சீனுவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த லோகேஷின் குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி