காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 149 பேரை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதில் 59 பேர் சார் ஆட்சியர் ஆஷிக் அலி முன்பு ஆஜராகி, இனி குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என ஓராண்டு நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க 3 சிறப்பு காவல் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி அரவிந்த் தெரிவித்துள்ளார்.