காஞ்சிபுரம் அடுத்த கொட்டவாக்கம் கிராமத்தில் இருந்து பள்ளம்பாக்கம் வழியாக தண்டலத்திற்கு செல்லும் பிரதான சாலைக்கு குறுக்கே உள்ள வளத்துார் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில், பள்ளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கட்டடக் கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த கழிவுகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.