காஞ்சிபுரத்தில் குடிநீர் குழாய்கள் தீயில் எரிந்து நாசம்

0பார்த்தது
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சேமிப்பு கிடங்கில் இன்று (மே. 28) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் பைப்கள், பாதாள சாக்கடை குழாய்கள் மற்றும் கேபிள்கள் எரிந்து நாசமாயின. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடைக்கு வந்த ஒருவர் சிகரெட்டை அணைக்காமல் போட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி