பிக்பாஸ் பார்த்த இளைஞர்கள் சட்டமன்ற நேரலை பார்க்கிறார்கள்

0பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸ் தனியார் அரங்கில் இன்று (மே. 19) நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "இளைஞர்கள் தற்போது அரசியலுக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ் பார்த்த இளைஞர்கள் தற்போது சட்டமன்றத்தில் நடப்பவைகளை நேரலையில் பார்க்கின்றனர்" என்று குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி எம்எல்ஏ, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you