காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆல்ஃபா மொபைல்ஸ் கடையில், மே 14 அன்று டேபிளில் வைக்கப்பட்டிருந்த செல்போனை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.