
அரசு பேருந்தின் டயரில் சிக்கி பைக்கில் சென்ற இளைஞர் பலி
சென்னையில் இருந்து மதுராந்தகம் நோக்கி யமஹா ஆர்15 இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்ற சதிஷ்குமார், மாமண்டுர் அருகே அதிவேக கார் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, திண்டிவனம் நோக்கி வந்த அரசு பேருந்தின் டயர் அவர் மீது ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் நேற்று நிகழ்ந்தது.





































