அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் சமர்ப்பிப்பு

874பார்த்தது
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் சமர்ப்பிப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் திடீரென தங்கள் பதவியை  ராஜினாமா செய்துள்ளனர். தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபமா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் மூவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மூவரும் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி