செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகாந்த் (32), வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகர் கோயில் திருவிழாவிற்கு ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்கம்பத்தில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், விஜயகாந்த் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.