செங்கல்பட்டு: குப்பை லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி

59பார்த்தது
செங்கல்பட்டு: குப்பை லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி
காட்டாங்கொளத்தூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதி ஆட்டோ டிரைவர் சந்திரமோகன் (37) உயிரிழந்தார். மே 17 மாலை ஒரகடத்தில் இருந்து காட்டாங்கொளத்தூர் நோக்கி வந்த ஆட்டோ மீது கொளத்தூர் குப்பை கிடங்கு அருகே குப்பை ஏற்றி வந்த டாரஸ் லாரி மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் பலத்த காயமடைந்ததோடு, பயணிகள் லேசான காயமடைந்தனர். அனைவரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சந்திரமோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி