த.வெ.க. தலைவர் விஜய் 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என கவர்னர் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், விஜய் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசிக்க தவெக எம்.எல்.ஏ.க்கள் இன்று (மே 7) காலை 11 மணிக்கு பனையூர் அலுவலகம் வருமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மை கிடைக்காததால் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.