காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் தனியாா் உணவகம் அருகே விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் இருந்த மணல் மேட்டை, விஷ்ணு காஞ்சி காவல் நிலைய இரவு ரோந்துக் காவலா்கள் இருவா் மண்வெட்டி, கடப்பாரையால் இரவோடு இரவாக அகற்றி விபத்துகளைத் தடுத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தன்னலமற்ற சேவைக்கு காவல் ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் இருவரையும் பாராட்டினாா்.