காஞ்சிபுரம்: மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

236பார்த்தது
காஞ்சிபுரம்: மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் மற்றும் இரும்பேடு பகுதிகளைச் சேர்ந்த சரண் (10) மற்றும் ஜோஸ்வா (9) என்ற பள்ளி மாணவர்கள் நேற்று அம்மன் கோவில் குளத்தில் மீன் பிடிக்க சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இரவு வரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடிச் சென்றபோது, குளத்தில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. சோமங்கலம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி