பெரும்பாக்கம் அரசு கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு

293பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (பிப். 16) புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் 15 வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், ஒன்றிய சேர்மன் சங்கீதா பாரதிராஜன், கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.