மேலவலம் அரசு மேல்நிலை பள்ளிகளில் கலையரங்கம் திறப்பு விழா

0பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி மேலவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 80 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. மேலும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை திறந்து வைத்தார். பள்ளி மாணவர்கள் உயர்கல்வி அடையவும், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி